தமிழ்நாடு

அரக்கோணம்: தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்துக் குதறிய வெறிநாய்

அரக்கோணம்: தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்துக் குதறிய வெறிநாய்

kaleelrahman

அரக்கோணத்தில் வெறிநாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பங்காரம்மா கண்டிகை பகுதியில் தெருநாய் ஒன்றுக்கு வெறிபிடித்து சாலையில் சென்ற மக்களை விரட்டி விரட்டி கடித்தது. இதையடுத்து வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலத்த காயமடைந்த 5 பேர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.