நரிக்குறவர சமூகத்தினர் PT
தமிழ்நாடு

விசாரணை கைதியாக கூட்டிச் செல்லப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரக்கோணம் அடுத்த தணிகைப் போளூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். ஐந்துக்கும் மேற்பட்டோரை திருட்டு வழக்கில், சந்தேகத்திற்கு இடமாக விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

PT WEB

அரக்கோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நரிக்குறவர் சமூகத்தினரை நள்ளிரவில் வீடு புகுந்து விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடுமைப் படுத்துவதாக அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டினர்.

அரக்கோணம் அடுத்த தணிகைப் போளூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் நேற்று இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்டோரை திருட்டு வழக்கில், சந்தேகத்திற்கு இடமாக விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவர்களை கொடுமைப்படுத்துவதாக அவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.