தமிழ்நாடு

அரக்கோணம்: அடிப்படை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

அரக்கோணம்: அடிப்படை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

kaleelrahman

அரக்கோணம் அருகே அடிப்படை வசதி இல்லாததால் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி, அம்பேத்கார் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 130 வாக்காளர்களை கொண்ட கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த கிராமத்திற்கு எந்த ஒரு கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க வந்ததில்லை என புகார் கூறும் இவர்கள் இதற்கு அதிகாரிகளும் முறையான பதிலளிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.