ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.