தமிழ்நாடு

தமிழா தமிழா கண்கள் கலங்காதே: ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே: ஏ.ஆர்.ரஹ்மான்

Rasus

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழா தமிழா கண்கள் கலங்காதே என்று பாடல் பாடி தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார்.

காலை 4.30 மணியில் இருந்து தனது வீட்டில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த ரஹ்மான் மாலை பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். இதை தனது பெரிஸ்கோப் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்பில் பதிவு செய்துள்ளார் ரஹ்மான். அந்த வீடியோவில், தமிழா தமிழா கண்கள் கலங்காதே... விடியும் விடியும் உள்ளம் மயங்காதே.. என்வீடு தாய்த் தமிழ்நாடு என்றே சொல்லடா.. என்நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா என்று அவர் பாடல் பாடியுள்ளார்.