தமிழ்நாடு

நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் : ஏப்ரல் 18-ல் அரசு பொதுவிடுமுறை

நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் : ஏப்ரல் 18-ல் அரசு பொதுவிடுமுறை

webteam

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தின் 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது. 

முன்னதாக, தேர்தல் நடைபெறும் நாளான்று அரசுகள் பொது விடுமுறை விட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தேர்தல்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. அதனால், அன்றைய தினம் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.