தமிழ்நாடு

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

webteam

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்

புதுச்சேரி அரசின் அழைப்பை ஏற்று மூன்று பாரதிய ஜனதா கட்சியின் நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பேரவைக்கு வந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தினர். இதனையடுத்து இன்றைய பேரவைக் கூட்டத்தில் 3 பேரும் பங்கேற்கின்றனர். 

மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களையும் பேரவைக்குள் அனுமதிக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனையடுத்து 3 பேருக்கும் புதுச்சேரி பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று அவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தற்போது பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது.