தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

webteam

எம். ஜி.ஆர் நூற்றாண்டு: மதுரையில் தொடங்கியது  விழாவை முன்னிட்டு அவரது புகழ் பரப்பும் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைத்தார். 

விழா நடைபெறும் மைதானத்தில் பள்ளிக் குழந்தைகளும், நாடக கலைஞர்களும் எம்.ஜி.ஆர் வேடமணிந்து பழனிசாமியை வரவேற்றனர். இதை ஏற்றுக்கொண்ட முதல்வர், அங்கிருந்த எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் எம்ஜி.ஆரின் புகழ் பரப்பும் கண்காட்சியை தொடங்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்க அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றுள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனால், மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் மதுரை சுற்றுச்சாலையில் பாண்டி கோயில் அருகே தோரண வாயிலுடன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.