வரும் 8-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் இரு வேளைகளில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு புதிய அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கெனவே சட்டப்பேரவைக் கூட்டம் ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டு நிலையில் தற்போது அலுவல் ஆய்வுக்குழு கூடி புதிய முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி வரும் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இருவேளைகளில் சட்டமன்றம் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் வருகிற 10,11,12 ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்றும், வரும் 13-ஆம் தேதி கேள்வி நேரம் கிடையாது என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.