ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். மாற்றுப்பாதை வழியாக ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை வந்தடைந்து மண்டபத்திற்குள் நுழைந்ததும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அரங்கில் இருந்தவர்கள் முழக்கங்களாக எழுப்பினர்.
அத்துடன் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோரை எதிர்த்து முழக்கங்கள் கடுமையாக எழுப்பப்பட்டது. இதையடுத்து வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் மேடையிலிருந்து கீழே இறங்கினர்.
இதையும் படிக்கலாமே: அதிமுக பொதுக்குழு: மதுரவாயல் -வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. மக்கள் அவதி