தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கு லஞ்சம் : CTS, TCS மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு!

webteam

சோழிங்கநல்லூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் காக்னிசெண்ட் நிறுவனத்தை கட்டுவதற்காக சிஎம்டிஏ அதிகாரிகள் 12 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

2011 முதல் 2016 காலகட்டத்தில் சோழிங்கநல்லூரில் காக்னிசெண்ட் டெக்னாலஜி அடுக்குமாடி அலுவலகம் கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு விண்ணப்பித்திருந்தது. கட்டுமானம் கட்டுவதற்கு முன்பாக திட்ட அனுமதி பெற வேண்டும் என்பது விதி 2013 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு 2014 ஆம் ஆண்டு காலம் தாழ்த்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அப்போதைய காலகட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறாக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் (சி டி எஸ் )காகிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீ மணிகண்டன், முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஸ்ரீதர் திருவேங்கடம், காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம், எல் அண்ட் டி முன்னாள் கட்டுமான பிரிவு தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தொழில் பிரிவு தலைவர் கண்ணன் , முன்னாள் செயல் துணைத் தலைவர், தற்போதைய மூத்த செயல் துணைத் தலைவருமான சதீஷ், தற்போதைய கட்டுமான பிரிவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ஆகிய 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.