தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: ஏ.என்.பி.ஆர். கேமராவில் சிக்கிய 10,905 வாகன ஓட்டிகள்!

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: ஏ.என்.பி.ஆர். கேமராவில் சிக்கிய 10,905 வாகன ஓட்டிகள்!

Sinekadhara

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நவீன கேமராக்களில் சிக்கிய 10,905 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அண்ணா நகர் ரவுண்டானா, சாந்தி காலனி, முகப்பேர், திருமங்கலம் உள்பட 5 சிக்னல்களில் (ஏ.என்.பி.ஆர்.) A.N.P.R. எனப்படும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தை வேகமாக இயக்குவது, ஸ்டாப் லைனை தாண்டி வாகனத்தில் நிற்பது, சிவப்பு சிக்னலை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வாகன பதிவெண்களை அந்தக் கேமரா உடனே படம்பிடித்து, தேசிய தகவல் தொழில்நுட்பத்தின் சர்வருக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட வண்டி உரிமையாளரின் செல்போனுக்கு 10 நொடிகளில் குறுஞ்செய்தி வடிவில் நோட்டீஸ் அனுப்பும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து விதிகளை மீறிய 10,905 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வாரத்திற்குள் முறையான விளக்கம் அளிக்காத பட்சத்தில், அபராதம் வசூலிப்பதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.