மணப்பாறைப்பட்டியில் செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குநரான சுதாவின் கணவர் வசந்தகுமாரும் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவர், அதே பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, வசந்தகுமாரை அடித்து காவல் துறையினரிடம் மாணவியின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.
இதனிடையே, வசந்தகுமார் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகியது. இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் பள்ளியின் கண்ணாடி மற்றும் அங்கிருந்த கார் உள்ளிட்டவற்றை அடித்து சேதப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் சுதா, வசந்தகுமார், தாளாளர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனிடையே முக்கிய நபரான வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மேலும் ஒரு மாணவி புகார் அளித்துள்ளார்.