போதைப்பொருள் வழக்கில் கைதானவர் புதியதலைமுறை
தமிழ்நாடு

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு NCB காவலர் கைது!

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் NCB (மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு) காவலர்கள்.

ஜெ.அன்பரசன்

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் NCB காவலர் ஆனந்த் பிடிபட்ட நிலையில் மேலும் ஒரு NCB காவலரை பிடித்து விசாரணை.

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள்

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் NCB காவலர் ஆனந்த் என்பவரிடம் இருந்து மெத் போதைப்பொருள் வாங்கி விற்பனை செய்வதாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் NCB காவலர் ஆனந்த் தலைமறைவானார். பின்னர், ஆனந்த் வீடு அவர் தொடர்புடைய இடங்களில் தி.நகர் துணை ஆணையர் தனிப்படை போலீசார் அதிரெடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது NCB காவலர் ஆனந்த் தனிப்படை போலீசாரால் பிடிப்பட்டார். பிடிப்பட்ட ஆனந்திடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் NCB காவலர் ஆனந்தின் நண்பரான மற்றொரு NCB காவலர் சமீர் என்பவரையும் தி.நகர் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NCB காவலர்கள் இருவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்ததால் இருவரையும் தி.நகர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.