சென்னை அருகே தாம்பரத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் மருத்துவர்களுக்கு விற்ற புகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சென்னை தாம்பரம் அருகே ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற புகாரில் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்னேஷ் 4,700 ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்களுக்கு முறைகேடாக விற்றிருந்தார். விக்னேஷிடம் ரூ.4,700க்கு ரெம்டெசிவிரை வாங்கி அதை நோயாளிகளுக்கு ரூ.20 ஆயிரத்திற்கு மருத்துவர்கள் விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்ற புகாரில் முகமது இம்ரான் என்ற மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.