தமிழகத்தில் மேலும் 15,684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் ஏற்கெனவே 4,206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதன் எண்ணிக்கை 4,250 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 50 பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 44 பேர் என மொத்தம் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,651 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,07,145 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 13,625 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 9,76,876 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.