மகளிர் நலத்திட்டங்கள் முகநூல்
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்டில் ஒளிபெறும் மகளிர் நலத்திட்டங்கள்!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது - பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.. அடுத்த ஆண்டு தேர்தல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள திமுக அரசின் 5ஆவது மற்றும் கடைசி முழு பட்ஜெட்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக பட்ஜெட்டில் ஒளிபெறும் மகளிர் நலத்திட்டங்கள்!

  • 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்த நிதியாண்டில் உருவாக்கப்படும்.

  • வரும் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்கப்படும்.

  • மகளிர் விடியல் பயணத் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • மகளிர் நலத் திட்டங்களுக்கு மகுடம் வைக்கும் திட்டம்தான் மகளிர் உரிமைத் தொகை.

  • ஊர்க்காவல் படையினருக்கு சமமான ஊதியம் மூன்றாம் பாலினத்தவருக்கும் தரப்படும்.

  • மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு.

  • 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும்.

  • இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம்.

  • காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்.

  • 700 படுக்கைகள் கொண்டு சிகிச்சை அதிநவீன மையமாக மாற்றுவதற்கு ரூ. 120 கோடி ஒதுக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு செய்யப்படும்.

கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி

பரவிவரும் கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக செலுத்தப்படும். இதற்கு ரூ. 36 கோடி ஒதுக்கப்படுகிறது.

தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.