தமிழ்நாடு

விலை நிலை நிறுத்தும் நிதி உருவாக்கம் - தமிழக அரசு அறிவிப்பு

PT WEB

வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் போது குறைந்த விலையில் நுகர்வோர் பொருட்களை பெறுவதற்கு 100 கோடி ரூபாயில் விலை நிலை நிறுத்தும் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான அரசி, பருப்பு, புளி, எண்ணெய், மிளகாய், வெங்காயம், உருளைகிளங்கு ஆகிய பொருட்கள் வெளிச்சந்தையில் விலை உயரும் போது, கொள்முதல் செய்து கூட்டுறவு அலகுகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு விலை நிலை நிறுத்தும் நிலை பயன்படுத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்படும் நேரங்களில் விலைநிலை நிறுத்தும் நிதியை கொண்டு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.