தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், இன்று மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இருந்தாலும் புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருப்பதாகவும், 24 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு வட மாவட்டங்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சிதம்பரம் அண்ணாமலை மற்றும் சென்னை பல்கலைக்கழக நாளைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் மழை தொடரும் என்பதால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பருவதேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.