Annamalai
Annamalai file
தமிழ்நாடு

”11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது; இந்தியாவிலேயே அதிக ஊழல் வழக்கு தமிழகத்தில் தான்” – அண்ணாமலை

webteam

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

”வீரம் விளைந்த மண், இந்திய விடுதலைக்கு போராட்டத்துக்கும், சோழர் காலத்தில் சண்டைகளமாகவும் இருந்த மண் இந்த வேலூர் மண். இன்றைக்கு "மோடி கியராண்டி" என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். பல மாநிலங்களில் இல்லாத பல சிறப்பான திட்டங்கள் வேலூருக்கு வந்துள்ளது. 9 ஆண்டில் 2,637 கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்பட்டது. 980 கோடி ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை.

PM Modi

1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது உருவாக்கியது அல்ல வேலூர். பல்லவர்கள், மராட்டியர்கள், நாயக்கர்கள் என வெவ்வேறு காலத்தில் உருவாக்கப்பட்டது. திருப்பூரில் தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த பலர் உத்திரப்பிரதேசத்துக்கு செல்கிறார்கள். காரணம் உ.பி வளர்ந்துவிட்டது. வளர்ச்சியில் 2 ஆம் இடத்தில் இருந்த தமிழகம் 3 ஆம் இடத்துக்கு சென்றுள்ளது. மீண்டும் பழைய இடத்துக்கு திமுக கொண்டுவராது. ஏன்னா திமுகவுக்கு ஆளுமை திறமை இல்லை.

11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஊழல் வழக்கு உள்ளது தமிழகத்தில் தான். 31 மாதம் திமுக செய்யும் வேலை, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் மாற்று பெயரை வைப்பது தான். தற்போது முதல்வர் செயல்படுத்தியுள்ள காலை உணவு திட்டம், மத்திய அரசின் திட்டம்.

cm stalin

வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 123 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்டவர்களை இந்த அண்ணாமலை களையெடுப்பேன், பதிலடி கொடுப்பேன். நான் விடமாட்டேன். பாஜகவில் உள்ள வேலூர் இம்ராஹிமை எதிர்ப்பது திமுக முஸ்லிம்கள் தான்” என்றார்.

உங்கள் அன்பால் எனது கையில் பல கீரல்கள் உள்ளது என தொண்டர்களுக்கு கை கொடுக்கும்போது ஏற்பட்ட கீரல்களை காண்பித்து பேசினார்.