Annamalai  | BJP
Annamalai | BJP file
தமிழ்நாடு

“சென்னை பெருவெள்ள நேரத்தில் பிஸ்கட், பால் பாக்கெட்கூட காங்கிரஸ் கட்சியினர் கொடுக்கவில்லை” - அண்ணாமலை

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்

திருவள்ளூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்...

“பாஜக தனித்து நின்று, தனித்தன்மையோடு விஷயத்தை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஜாதி அரசியல் குடும்ப அரசியல் இல்லாத, அடாவடித்தனம் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும் என்பதற்காக நின்று கொண்டிருக்கிறது. இதை பார்த்து பங்காளி கட்சியை சேர்ந்த ஒருவர், அண்ணாமலை லேகியம் விற்பதாக கூறுகிறார்.

EPS

நான் லேகியம்தான் விற்கிறேன். நம்ம லேகியத்தை பயன்படுத்தினால் குடும்ப ஆட்சி இருக்காது, குடும்ப அரசியல் இருக்காது, லஞ்ச லாவண்யம் இருக்காது, அடாவடித்தனம் இருக்காது. நம்முடைய லேகியத்தில், ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. தரையில் தவழ வேண்டிய வேலை இல்லாமல் தலை நிமிர்ந்து நின்று நேர்மையாக ஆட்சி செய்ய முடியும்.

ஆமாம், நான் லேகியம்தான் விற்கின்றேன். பங்காளி கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக லேகியம் விற்றுக் கொண்டிருக்கின்றேன். தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான நேரமும் காலமும் வந்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் பாதை சிங்கப் பாதையாக இருக்குமா தனி பாதையாக இருக்குமா என பாருங்கள். இத்தனை ஆண்டு காலம் தமிழகத்திலே திராவிடத்திற்கு மாற்றாக ஒரு கட்சியை வேண்டும் என்று நினைத்தோம். அது பாரதிய ஜனதா பூர்த்தி செய்யுமா என்கிற ஏக்கத்திற்கும், ஆவலுக்கும். 2024 பாராளுமன்ற தேர்தல் நிச்சயமாக பதில் சொல்லும்.

PM Modi

2024ல் பாரதிய ஜனதா கட்சி 30 சதவீதம் வாக்கு பதிவை பெற்று வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இருந்து பாரத பிரதமர் மோடி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வார்கள். நாட்டில் பரவியுள்ள விஷத்தை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் இரண்டு மூன்று ஆண்டுகள் போதாது. இந்தி தெரியாது போடா என டி-சர்ட் அணிவார்கள். ஆனால், இந்தி பட உரிமையை தமிழ்நாட்டுக்கு வாங்குவார்கள்.

காங்கிரஸ் கட்சி ஐசியு-விலிருந்து எழுந்திருப்பதே தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போதுதான். அழகிரி சொல்கிறார், தமிழ்நாட்டில் தனியாக 12 சீட் ஜெயிப்பார் என்று. இந்தியா முழுவதும் நின்றாலும் கூட 12 சீட்டுகள் ஜெயிக்க முடியாது.

KS..Alagiri

சென்னையில் பெருவெள்ளம் தாக்கிய பொழுது ஒரு பிஸ்கட், பால் பாக்கெட் கூட காங்கிரஸ் கட்சியினர் கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இருப்பதே தேர்தலில் நிற்பதற்கும் கூட்டணி பேரம் பேசுவதற்கும் மட்டும்தான்” என்று திமுக கூட்டணி கட்சிகளை சாடினார்.