விஜய், அண்ணாமலை pt web
தமிழ்நாடு

“விஜய் எத்தனை முறை வெளியில் வந்தார்? 2026 சரித்திர தேர்தல்..” - தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை பேட்டி!

திராவிடக் கட்சிகள் பேசக்கூடிய அதே சித்தாந்தத்தைத்தான் விஜய்யும் பேசி இருக்கிறார். விஜய் மிகப்பெரிய நடிகர். அதை யாராலும் மறுக்க முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது மூன்று மாதகால பயணம் மற்றும் படிப்பை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அப்போதும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன், அவரை வரவேற்கிறோம். முதல் மாநாட்டில் நிறைய விஷயங்களை முன்வைத்துள்ளார். பாஜக தலைவர்கள் எல்லோரும் எதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ அதற்கெல்லாம் பதில் சொல்லியுள்ளார்கள்.

"தமிழகத்தில் திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன" - அண்ணாமலை

திராவிடக் கட்சிகள் பேசக்கூடிய அதே சித்தாந்தத்தைத்தான் விஜய்யும் பேசி இருக்கிறார். விஜய் மிகப்பெரிய நடிகர். அதை யாராலும் மறுக்க முடியாது. 25 ஆண்டுகாலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். ஆனால், அரசியல் களம் வேறு. அக்டோபர் 28க்குப் பிறகு விஜய் எத்தனை முறை வெளியில் வந்துள்ளார். அரசியலில் 365 நாட்களும் கீழேயே இருக்க வேண்டும். திராவிடக் கட்சிகளது வாக்குகள் மூன்றாக பிரிந்துள்ளதைத்தான் பார்க்கிறேன்.

உதயநிதியும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார், கட்சிக்குள் அவருக்கு வேகமான வளர்ச்சி. திமுக ஒரு குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அவர்கள் உண்மையாக்கியுள்ளார்கள். உதயநிதியை விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சிப்போம்; நன்றாக செயல்பட்டால் நிச்சயமாக பாராட்டுவோம். அதேவேளையில், ஹரியானா, மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வென்றுள்ளது. இந்திய அளவில் பாஜக வலிமையாக, எல்லா மாநிலத்திலும் முதன்மைக் கட்சியாக இருக்கிறது என்பதை மறுபடியும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.

Annamalai

ஊழலில் மலிந்திருக்கும் திமுக பெயிலில் வெளிவந்திருக்கும் செந்தில்பாலாஜியை ஒரு காந்தியாக காந்தியவாதியாக கொண்டாடுவது தமிழகத்திற்கு புதிது கிடையாது.

சீமான் பாதையும் எங்களது பாதையும் வேறு வேறு. தமிழக மக்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள் அனைத்தையும் பார்த்து முடிவெடுப்பார்கள். 2026 மிக முக்கிய சரித்திர தேர்தலாக தமிழகத்தில் அமையப்போகிறது. சீமான், விஜய், பாஜக, திராவிட கட்சிகள் என 2026 புதிய களமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.