கே.பி.முனுசாமி - அண்ணாமலை
கே.பி.முனுசாமி - அண்ணாமலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

“வட மாநிலத்தில் மட்டுமே இருந்த பாஜகவை 1998 தேர்தலில்..” - அண்ணாமலைக்கு கே.பி.முனுசாமி பதில்

webteam

கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்துக் கழக புறநகர் பணிமனையில் அதிமுக தொழிற்சங்க கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்...

Annamalai

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தம் குறித்து..

நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குழு அமைத்துள்ளார். அந்தக் குழு விரைவில் கூடி பேச்சுவார்த்தை நடத்தும். அதன் பிறகு எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருகின்றன என தெரிவிக்கப்படும். அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டு இறுதியாக அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்படும்.

பாஜகவை சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆதிரித்தால் அதிமுகவுத்தான் லாபம்!

சசிகலா, டிடிவி.தினகரன், ஓ,பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதால் அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரின் கடுமையான கோபத்திற்கு உள்ளாகுவார்கள்.

அதிமுகவை பற்றி மிக கடுமையான விமர்சனம் வைத்து அவர்களுடன் இவர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தால் நிச்சயமாக அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் கொதித்தெழுவார்கள். அதிமுகவிற்கு நட்டம் அல்ல, லாபம் தான். தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை மக்கள் தெரிவிப்பார்கள். அப்போது அண்ணாமலை உணருவார்.

PM Modi

“வட மாநிலத்தில் மட்டுமே இருந்த பாஜகவை 1998 தேர்தலில்..”

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பாஜக உருவான போது அண்ணாமலை ஒரு மாணவராக இருந்திருப்பார். அவர் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக வட மாநிலத்தில் மட்டுமே இருந்தது. அப்போது ஜெயலலிதா அவர்கள் தென் மாநிலத்திற்கு பாஜகவை அழைத்து வந்து அன்றைய பாஜக தலைவர் வாஜ்பாய் மற்றும் செயல் தலைவர் அத்வானி ஆகியோருடன கூட்டணி ஏற்படுத்தி அறிமுகம் செய்தவர் ஜெயலலிதா. இதனை அண்ணாமலை அறிந்து கொள்ள வேண்டும்.

”எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள் என முதல்வர் பேசி வருகிறார்”

அனேகமாக இந்தியாவில் ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு பொய் சொல்லுகின்ற ஒரு முதல்வர் யார் என்று சொன்னால் அது ஸ்டாலினை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. நீட் தேர்வு எந்த காலத்தில் வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஏதோ பேசுகிறார். ஜல்லிக்கட்டு காப்பாற்றியது நான் என்று கூறுகிறார். மக்கள் மறந்து விடுவார்கள், எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள் என முதல்வர் பேசி வருகிறார். இதற்கான பதில் நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும்,

ttv, sasikala, Ops

”மோடி பற்றி பேசும் அண்ணாமலை, கட்சியை உருவாக்கிய தலைவர்களைப் பற்றி பேசுவதில்லை..”

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலைபடுத்தி பேசி வருகிறார். பாஜகவை அவர் முன்னிலைபடுத்தவில்லை. உயர்ந்த இட த்திற்கு வர முயற்சி செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தைப் பெற முயற்சி செய்து வருகிறார். அரசியல் வரலாறு தெரியாமல் பேசுகிறார் பாஜக உருவாக்கப்பட்ட போது அந்த கட்சிக்கு தலைவர் இல்லை. அதன் பிறகு தலைவராக வாஜ்பாய், செயல் தலைவராக அத்வானி ஆகியோர் இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி ஒரு தொண்டனாகவோ அல்லது ஒரு மாநில தலைவராகவோ இருந்திருப்பார். ஆனால் நரேந்திர மோடி பற்றி பேசும் அண்ணாமலை, கட்சியை உருவாக்கிய தலைவர்களைப் பற்றி பேசுவதில்லை அவர்கள் மறைக்கப்படுகிறார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நரேந்திர மோடி முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிந்து கொண்டு அண்ணாமலை பேச்சை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ராமர் அனைவருக்கும் தெய்வம் அந்த தெய்வத்தை வைத்து யாராவது ஏமாற்றினால் அந்த தெய்வம் சும்மா இருக்காது அதற்கான தண்டனையை அந்த ராமபிரான் வழங்குவார்” என தெரிவித்தார்.