தமிழ்நாடு

அண்ணாமலை முதிர்ச்சியான தலைவர் அல்ல: திணிக்கப்பட்ட தலைவர் - திருநாவுக்கரசர் எம்பி

webteam

ராகுல் காந்தியின் நடைபயண எழுச்சியைக் கண்டு பாஜகவினர் அஞ்சுவதால் தான் விமர்சனம் செய்கின்றனர் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற காவேரி குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:...

ராகுல் காந்தியின் நடைபயணம் எழுச்சி பெறும், ராகுல் காந்தியின் நடை பயணத்தை கண்டு பாஜக அஞ்சுகிறது அதனால்தான் அவர் மீது விமர்சனத்தை முன் வைக்கின்றனர், ஒரு அரசியல் கட்சி தலைவரின் செயல்பாடு குறித்துத்தான் விமர்சனம் செய்ய வேண்டும் அவர் அணியும் பனியன் உள்ளிட்ட ஆடைகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது,

பாஜக தலைவர் அண்ணாமலை திணிக்கப்பட்ட தலைவர் அதனால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை காலில் விழ வைத்து அவரை முதிர்ச்சியான தலைவர் போல் காட்ட முயல்கின்றனர், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் அரசே பயிற்சி மையங்களை அமைத்து இலவசமாக சிறந்த முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினார்.