பாஜக செய்தித் தொடர்பாளர் கே.டி.ராகவன் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வாரிய இயக்குநர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கே.டி.ராகவன் மீதான புகார் குறித்து அவர் சட்ட நடவடிக்கை எடுப்பார் எனக் குறிப்பிட்டார்.
பாலியல் வழக்கில் கைதான சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் சொத்துக்களை கே.டி.ராகவன் கைப்பற்ற முயற்சிப்பாக, சிவசங்கர் பாபாவின் சீடர் நடிகர் சண்முகரா என்பவர் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.