அண்ணாமலை pt desk
தமிழ்நாடு

”அண்ணா சாலையில் எந்த இடத்திற்கு வர வேண்டும்; தனியாவே வரத்தயார்” - உதயநிதிக்கு அண்ணாமலை சவால்!

அண்ணாசாலை என்று பொதுவாக சொல்லாமல் அண்ணாசாலையில் எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று உதயநிதி கூறினால் தனியாக வரத்தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: S.மோகன்ராஜ்

கல்விக் கொள்கை, மொழிக்கொள்கை விவகாரங்கள், பாஜக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் வார்த்தைப் போராக மாறிவருகிறது. இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நிலவி வரும் மொழிக்கொள்கை விவகாரத்தை கடவுள் கொடுத்த வாய்ப்பாகவே கருதுவதாக தெரிவித்தார்.

udhayanidhi, annamalai

சென்னையில் கோலமிட்டது திமுகவினர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது:

மொழிக்கொள்கை விஷயத்தில் பாஜக கடந்த ஒரு வார காலமாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டி வருவதாக கூறிய அண்ணாமலை, சென்னையில் பெண்கள் கோலமிட்ட விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் அது திமுகவினர் இட்ட கோலம் என்பது பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. பொய்யை துணையாகக் கொண்டு இந்தப் பிரச்னையை முதலமைச்சர் நகர்த்த முயற்சிக்கிறார்.

உதயநிதி தரம் தாழ்ந்து பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்:

சென்னை வேளச்சேரியில் ப்ளு ஸ்டார் என்ற பெயரில் திருமாவளவன் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருவதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில வழிப் பள்ளிகளிலேயே தமிழ்மொழி இல்லை. உதயநிதி தரம் தாழ்ந்து பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும். எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களை தரக்குறைவாக பேசியவர் உதயநிதி. தரத்திற்கும் இதயநிதிக்கும் north pole south pole-க்குமான இடைவெளி என்றும் கூறினார்.

CM Stalin

தமிழகத்தை சரியாக நிர்வகிக்க தெரியாத ஸ்டாலின் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்:

முடிந்தால் அண்ணாசாலைக்கு வரட்டும் என்று பொதுவாக சொல்லாமல் எந்த இடம் என குறிப்பிட்டால் தனியாக வரத்தயார் என்று அண்ணாமலை எதிர்வினை ஆற்றினார். திமுக ஐடி விங்கிற்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் என்ன வேண்டுமானலும் பதிவிடலாம்; நாளை காலை 6 மணிக்கு தனது முகநூல் பக்கத்தில் 'go back Stalin' என்பதை ட்ரெண்ட் ஆக்க உள்ளதாகவும் கூறிய அண்ணாமலை, தமிழகத்தை சரியாக நிர்வகிக்க தெரியாத ஸ்டாலின் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சாடினார்.

திமுகவில்தான் 15 வகையான தொண்டர்கள் இருக்கிறார்கள்:

அமைச்சர் சேகர்பாபு கூறிய கருத்திற்கு பதிலளித்த அண்ணாமலை, பாஜக-வில் மோடி முதல் உறுப்பினர் வரை அனைவரும் தொண்டர்கள்தான்; திமுகவில்தான் 15 வகையான தொண்டர்கள் இருக்கிறார்கள்! எந்த தொண்டனை வேண்டுமானும் எனக்கு எதிராக நிறுத்தட்டும் பார்க்கலாம் என சவால் விடுத்தார். அம்மா கடவுள் என்று சொல்லிய சேகர்பாபு, மதம் மாறி கலைஞர் கடவுள் என்று கூறுபவர். அவர் அறிவுரை, ஆலோசனை சொல்லி திருந்தும் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.