தமிழ்நாடு

தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம்

webteam

தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு அண்ணாமலை, ஜே.பி.நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அண்ணாமலை பேசுகையில் கட்சியில் ஒரு தொண்டனாக சேர்ந்திருக்கும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை என்றும் கட்சி சார்பில் எடுக்கும் எவ்வகையான முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றும் கூறினார். மேலும் கட்சியை வலுப்படுத்த என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில், அண்ணாமலை, தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணிகள் சிறக்க வாழ்த்துகள் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவெ பாஜக மாநிலத் துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ் நரேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, முருகானந்தம், எம்.என். ராஜா, மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சி கவிதாசன் ஆகியோர் உள்ள நிலையில் அண்ணமலைக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.