தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வாபஸ்

webteam

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை, பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள விதிகளை நீக்கக் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதாவது, முதல் பருவத்தில் தோல்வியடைந்த பாடத்தை மீண்டும் அடுத்த அடுத்த ஆண்டுகளின் முதல் பருவத்தில் மட்டுமே எழுது முடியும். மேலும் ஒரு பருவத்தில் 36 புள்ளிகளுக்கு மிகாமல் பாடங்களைத் தேர்வு செய்து எழுது வேண்டும் போன்ற விதிகளை அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ளது.

இந்த விதகளால் தங்களது பட்டப்படிப்பு தாமதமாவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் இருந்து வந்த மாணவர்கள், இந்த விதிமுறைகளை தகர்க்க வலியுறுத்தி அண்ணா ப‌ல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பல்கலைக்கழக பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என அவர் அளித்த உறுதியையேற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.