தமிழ்நாடு

அனிதா உடல் இன்று பிற்பகல் தகனம்

அனிதா உடல் இன்று பிற்பகல் தகனம்

webteam

மறைந்த அனிதாவின் உடல் பிற்பகலில் தகனம் செய்யப்பட இருக்கிறது.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிய அனிதா, தனது மருத்துவ கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூரில் வைக்கப்பட்டுள்ளது. 
அவர் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனிதாவின் மரணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் மறைந்த அனிதாவின் உடல், குழுமூரில் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படுகிறது.