திண்டுக்கல் pt
தமிழ்நாடு

திண்டுக்கல்|குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி பணியாளர்!

இதுகுறித்து குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

PT WEB

திண்டுக்கல் அருகே குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சுரக்காய்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் இரண்டரை வயது குழந்தைக்கு, அங்கு உதவியாளராக பணியாற்றும் செல்லம்மாள் கழுத்தில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் சரவணனனிடம் விளக்கம் கேட்டபோது, முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் குழந்தை பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையப் பணியாளர் பாப்பாத்தி, உதவியாளர் செல்லம்மாள் ஆகியோரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.