ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை, திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்கோயிலுக்கு சாமி தரிசனம்செய்வதற்காக, தாயுடன் இளம் பெண்வந்துள்ளார். 29ஆம் தேதி நள்ளிரவு வாழைத்தார் ஏற்றி வந்த மினி வேனில் லிஃப்ட் கேட்டு இருவரும் வந்த நிலையில், வேனை இடைமறித்த காவலர்கள், தாய்-மகளை கீழே இறங்க சொல்லி, அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோர் தாயை பள்ளத்தில் தள்ளிவிட்டு, இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அளித்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்டகாவலர்களிடம் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்தனர்.பொதுமக்களின் பாதுகாப்புக்காக பணியில் இருக்கும் காவலர்களே இதுபோன்ற வன்கொடுமையில் ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.