செம்மர கடத்தல் - கைதுசெய்யப்பட்ட இருவர் pt desk
தமிழ்நாடு

ஆந்திரா: வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது காரை ஏற்றிக் கொலை - இருவர் கைது

வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த செம்மர கடத்த தடுப்பு பிரிவு போலீஸ் மீது காரை ஏற்றிக் கொலை. தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் கைது. மூன்று பேர் தப்பியோட்டம்.

Kaleel Rahman, webteam

செய்தியாளர்: தினேஷ் குணகலா

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கே.வி.பள்ளி அருகே இருக்கும் குன்றவாரி பள்ளி சாலை சந்திப்பு அருகே இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் செம்மரக்கட்டைகளை காரில் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

செம்மர கடத்தலுக்கு பய்ன்படுத்தப்பட்ட கார்

அப்போது நிற்காமல் வேகமாக வந்த அந்த கார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் கணேஷ் என்பவர் மீது மோதியுள்ளது. இதில் பலந்த காயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் காரில் இருந்த ஐந்து பேரும் தப்பியோட முயன்றுள்ளனர். அதில், இரண்டு பேரை அருகில் இருந்த போலீசார் மடக்கிப் பிடித்தனர். மூன்று பேர் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து கார் மற்றும் அதிலிருந்த ஏழு செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது செம்மரக்கடத்தல் கும்பல் காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.