தமிழக-ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் சுவரை 12 அடிக்கும் மேலாக உயர்த்தி ஆந்திர அரசு கட்டி வருகிறது.
கடலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியான சாமுண்டி பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தடுப்பணை கட்டியது. அதன் பிறகு அதனை 5 அடி தடுப்பு சுவராக எழுப்பி தண்ணீரை தேக்கியது. தற்போது 5 அடியாக உள்ள சுவரை 12 அடியாக உயர்த்தி ஆந்திர அரசு கட்டி வருகிறது.
ஆந்திர எல்லையிலிருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் பாலாற்றில் வழிந்தோடும் நீரை நம்பி தமிழக பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது 5 அடியாக இருந்த தடுப்பு சுவர் 12 அடிக்கும் மேலாக உயர்த்தி ஆந்திர அரசு கடந்த சில நாட்களாக கட்டி வருவதால், இனிமேல் பாலாற்றில் வழிந்தோடும் தண்ணீரும் நின்று விடும் என்று தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, பொகிலிரே என்ற இடத்தில் ஆந்திர அரசு அடுத்த தடுப்பு அணையை கட்ட திட்டமிட்ட உள்ளதாக கூறப்படுகிறது.