தமிழ்நாடு

கோவையில் மலைச்சரிவிலிருந்து விழுந்து ஒரு வயது யானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு

கோவையில் மலைச்சரிவிலிருந்து விழுந்து ஒரு வயது யானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு

sharpana

வால்பாறையில் 1 வயது பெண் குட்டி யானை மலை சரிவில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளன. வால்பாறை அக்காமலை பில்மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது துர்நாற்றம் வீசியுள்ளது. அருகில் சென்று பார்த்ததில் குட்டி யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்துக் கிடந்துள்ளது. இதனை, ஆனைமலை புலிகள் காப்பகம் இணை இயக்குனர் ஆரோக்கிய சேவியர் தலைமையில் வால்பாறை சரகர் ஜெய்சந்திரன் முன்னியிலையில் வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் தன்னார்வளர் கணேஷ் மற்றும் வனவர் முனியாண்டி கீர்த்தி ஆகியோர்கள் குழு வனப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தது.

அதில், மலை சரிவில் இருந்து விழுந்த குட்டியானை சுமார் 1 வயது இருக்கும் என்றும் பெண் யானை என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து குட்டி யானையின் உடலை உடல் கூறு ஆய்வு செய்து வன விலங்குகள் உண்பதற்காக உடலை விடப்பட்டது. வால்பாறை பகுதியில் கடந்த மூன்று தினங்களில் இரண்டு யானைகள் இறந்து இருப்பது யானைகள் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.