சிலைக் கடத்தல் வழக்குகளில் அந்தப் பிரிவின் தலைவர் பொன் மாணிக்கவேல் நடத்தும் விசாரணையில் உதவும் வகையில் 17 அதிகாரிகளை நியமித்து காவல்துறைத் தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், சென்னை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களான ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளங்கோ, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லோகநாதன், சென்னையின் ரவி, அரியலூரைச் சேர்ந்த குமார், விழுப்புரத்தைச் சேர்ந்த ஜோஸ் தங்கய்யா ஆகியோரும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டிஎஸ்பிக்களில் நாகையைச் சேர்ந்த வெங்கடராமன், சென்னையைச் சேர்ந்த அசோக் நடராஜன், தஞ்சையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் உதவி செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கருணாகரன், தருமபுரியைச் சேர்ந்த விஜய கார்த்திக், தஞ்சையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், திருவாரூரின் ரகுபதி ஆகியோரும் இதில் உள்ளனர். நெல்லையைச் சேர்ந்த கனகராஜ், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர், சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு ஆகிய டிஎஸ்பிக்களும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பொன் மாணிக்கவேலுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.