மதுரையில் நடைபெற்ற தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு
தவெக மாநாட்டில் கலந்துகொண்ட 18 வயது இளைஞர் மரணம்
இரண்டுமுறை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மரணம்
மதுரை பாரபத்தி பகுதியில் இன்று பெரும் மக்கள் படை சூழை விஜய் தலைமையிலான தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது.
சட்டசபை தேர்தலையொட்டி நடந்த இரண்டாவது மாநாடு கவனம் ஈர்த்த நிலையில், விஜயின் அடுத்தகட்ட நகர்வை தெரிந்துகொள்ள லட்சக்கணக்காக தவெக தொண்டர்கள் மதுரையில் திரண்டனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் கலந்து கொண்ட, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதான ரோஷன் என்ற இளைஞர் மாநாட்டு திடலிலேயே மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த மருத்துவ குழுவினரால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சமயநல்லூர் அருகே மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகிலிருந்தவர்களால் சமயநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அப்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தற்போது ரோஷனின் உடல் சமயநல்லூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.