தமிழ்நாடு

அமமுக பொருளாளர் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடம்

அமமுக பொருளாளர் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடம்

webteam

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏவும் அமமுக பொருளாளருமான வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏவும் அமமுக பொருளாளருமாகவும் இருப்பவர் வெற்றிவேல். இவருக்கு காய்ச்சல், சளித் தொல்லை போன்ற தொந்தரவுகள் இருந்து வந்துள்ளது. இதையடுத்து வெற்றிவேலுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி அவர், சென்னை - போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வெற்றிவேலுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.