தமிழ்நாடு

புதிய தலைமுறையை ஒடுக்கப் பார்க்கின்றனர் - புகழேந்தி கண்டனம்

புதிய தலைமுறையை ஒடுக்கப் பார்க்கின்றனர் - புகழேந்தி கண்டனம்

webteam

புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்ததற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக பொதுச்செயலாளர் புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “புதியதலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு பதிவு செய்தது கண்டனத்திற்குரியது. ஊடகத்தை மிரட்டுகின்றனர். புதியதலைமுறை தொலைக்காட்சியை ஒடுக்க பார்கின்றனர். ஏற்கெனவே அரசு கேபிள்களில் புதியதலைமுறை பின்னுக்கு தள்ளப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு போன்ற நேரங்களில் தொலைக்காட்சிகளை மிரட்டினர். தமிழகத்தில் சிறிய அவசர நிலை பிரகடனம் போன்று உள்ளது. பாஜக நெருக்கடி காரணமாக தமிழக அரசு இது போன்று நடக்கின்றது” என்று கூறியுள்ளார்.