தமிழ்நாடு

தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி : அமமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி : அமமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

webteam

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அவற்றின் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது. அமமுக சார்பில் 24 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேனி தொகுதியில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் நிலையில், தற்போது தங்க தமிழ்ச்செல்வனை அமமுக களமிறக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் :-

வடசென்னை : சந்தானகிருஷ்ணன்

அரக்கோணம் : பார்த்திபன்

வேலூர் : பாண்டுரங்கன் 

கிருஷ்ணகிரி : கணேசகுமார்

தருமபுரி : பழனியப்பன்

திருவண்ணாமலை : ஞானசேகர்

ஆரணி : செந்தமிழன்

கள்ளக்குறிச்சி : கோமுகி மணியன்

திண்டுக்கல் : ஜோதி முருகன் 

கடலூர் : கார்த்திக்

தேனி : தங்க தமிழ்செல்வன்

விருதுநகர் : பரமசிவ ஐயப்பன்

தூத்துக்குடி : புவனேஸ்வரன்

கன்னியாகுமரி : லெட்சுமணன்

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் :-

சோளிங்கர் : மணி

பாப்பிரெட்டிப்பட்டி : ராஜேந்திரன்

நிலக்கோட்டை (தனி) : தங்கதுரை

திருவாரூர் : காமராஜ்

தஞ்சாவூர் : ரெங்கசாமி

ஆண்டிப்பட்டி : ஜெயக்குமார்

பெரியகுளம் : கதிர்காமு

விளாத்திகுளம் : ஜோதிமணி

தட்டாஞ்சாவடி : முருகசாமி