ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் - அமித் ஷா web
தமிழ்நாடு

OPS, தினகரனுக்கு அண்ணாமலை... EPS-க்கு நயினார்.. பக்காவாக காய் நகர்த்தும் அமித் ஷா?

அண்ணாமலையை தொடர்ந்து நயினார் நாகேந்திரனும் அமித் ஷாவை சந்திக்க செல்ல உள்ளார், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து பேசுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PT WEB

அமித் ஷா, பாஜக மாநில முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்களான அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் பயன்படுத்தி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் இன்னாள் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனும், அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல உள்ளார்.

அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே சந்தித்த கையோடு, டெல்லி புறப்பட்டு சென்றார் அண்ணாமலை. இதேபோல், தற்போது, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்துள்ள நயினார் நாகேந்திரன், அமித் ஷாவை சந்திக்கடெல்லி செல்ல உள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வேறு திசைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ளும் பணியை, அண்ணாமலையிடம் அமித்ஷா ஒப்படைத்திருப்பதாககூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன்

அதேசமயம் பழனிசாமியை சாந்தப்படுத்தவும், ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை பக்குவமாக எடுத்துச்சொல்லவும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை பயன்படுத்தும் திட்டமும் அமித் ஷாவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம், அமித் ஷாவின் அடுத்த காய்நகர்த்தல் குறித்து உற்று நோக்கவைத்துள்ளது.