தமிழ்நாடு

ஆம்பூர்: சிக்னல் கோளாறை சரிசெய்துவிட்டு திரும்பிய 2 ரயில்வே ஊழியர்கள் ரயில்மோதி உயிரிழப்பு

ஆம்பூர்: சிக்னல் கோளாறை சரிசெய்துவிட்டு திரும்பிய 2 ரயில்வே ஊழியர்கள் ரயில்மோதி உயிரிழப்பு

kaleelrahman

ஆம்பூரில் கொட்டும் மழையில் சிக்னல் கோளாறை சரி செய்து விட்டு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் 2 பேர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள பெங்களூரு சென்னை ரயில்வே மார்க்கத்தில் கடும் மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டெக்னீசியன் பர்வேஷ் குமார் ஆகியோர் கொட்டும் மழையில் சிக்னல் கோளாறை சரிசெய்து விட்டு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதி இருவரும் உடல் சிதைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.