பாஜகவினர் கைது pt desk
தமிழ்நாடு

ஆம்பூர் | திருப்பரங்குன்றம் மலை கோயில் விவகாரம் - 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

ஆம்பூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக 30-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்த போலீசார், விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகர் மலை கோயிலில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கக்கோரி இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ராமாநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சில அமைப்புகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

அங்கு அவர் அசைவ உணவு சாப்பிட்டதாக புகைப்படம் வெளியான நிலையில், முருகர் மலையில் அசைவ உணவு சாப்பிட்டத்தை கண்டித்தும், சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதிக்கக் கோரியும் திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கூட்டுச் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து 30க்கும் மேற்பட்ட பாஜக ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான போலீசார், கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதேபோல் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் ஓம்.சக்தி பாபு, பாஜக மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி, மாநில செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவர் அன்பு உள்ளிட்டோரை காவல்துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.