செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தயாள். இவர், உமராபாத் பகுதியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 18 வருடங்களுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடம் பிடித்து ஐபிஎல் கோப்பையை தட்டித் தூக்கியது.
இதனால் உற்சாகமடைந்த விராட் கோலியின் தீவிர ரசிகரான தயாள், பல வருட கனவு நிறைவேறியதால் இன்று (04.06.2025) ஒருநாள் மட்டும் தனது முடி திருத்தும் கடைக்கு வரும் நபர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்வதாக அறிவித்திருந்தார், இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் பலர் தயாளின் முடி திருத்தும் கடைக்கு வந்து இலவசமாக முடி திருத்தம் செய்து கொண்டனர்,
மேலும் ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்லது பல வருட கனவு தனக்கு நிறைவேறியதாகவும் அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்வதாக தயாள் தெரிவித்தார்.