தமிழ்நாடு

ரயில் நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள் - பயணிகள் அச்சம்

ரயில் நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள் - பயணிகள் அச்சம்

webteam

ஆம்பூர் ரயில் நிலையத்தில் குரங்குகளின் தொல்லை தருவதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர் இங்கு முன்பதிவு மையம் மற்றும் பயணிகள் அமரக்கூடிய ரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் இங்கு பயணிகளிடம் இருக்கக்கூடிய பைகளை பறித்து செல்கின்றன. அத்துடன் வாகனம் நிறுத்துமிடத்தில் சுற்றும் குரங்குகள் வாகனங்களை சேதப்படுத்துவதுடன், சேட்டைகளும் செய்கின்றன. 

மேலும் பயணிகள் வைத்து இருக்கக்கூடிய தின்பண்டங்கள், குளிர்பானங்களில் பிடுங்கிக்கொண்டு ஓடுகின்றன. அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி களையும், குரங்குகள் மிகுந்த சேதப்படுத்தி வருகின்றன இதனால் குரங்குகளை தடுக்க உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் குரங்குகள் போதிய உணவு மற்றும் நீரின்றி இவ்வாறு நடந்துகொள்வதாகவும், அவற்றின் தேவை வனத்துறை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.