வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை கொள்ளை  pt desk
தமிழ்நாடு

ஆம்பூர் | திமுக ஒன்றிய செயலாளர் மகன் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை கொள்ளை

ஆம்பூர் அருகே திமுக ஒன்றிய செயலாளர் மகன் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் மின்சாதனப் பொருட்கள் கொள்ளை ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் திமுக மாதனூர் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, இவரது மகன் குனேஷ், அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், குனேஷ் தனியார் கார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், பணிக்குச் சென்று விட்டு, இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம், ஐபோன் மற்றும் மின்சாதனப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து குனேஷ் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.