தமிழ்நாடு

மாமியார் - மருமகள் சண்டை தீர மாந்திரீகம் செய்வதாக கூறி தங்க நகைகளை அபேஸ் செய்த இளைஞர்!

webteam

ஆம்பூரில் மாமியார்-மருமகள் சண்டைகள் தீரும், தங்க நகை இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறி மாந்தீரீகம் செய்து தருவதாக இளைஞர் ஒருவர் 4 சவரன் தங்க நகையை ஏமாற்றி வாங்கிக்கொண்டு தப்பிசென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இன்று காலை வந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் மாமியார்-மருமகள் சண்டைகள் தீரும், நகைகள் இருட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறி மாந்திரீகம் செய்து தருவதாக கூறி வீட்டில் உள்ள தங்க நகைகளை கொண்டு வரும் படி கூறியுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் 4 சவரன் தங்க நகையை எடுத்து வந்து இளைஞரிடம் மாந்தீரீகம் செய்ய அளித்துள்ளார். பின்னர் 4 சவரன் தங்க நகையை பெண்ணை ஏமாற்றி எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து கவிதா ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அப்பகுதியில உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு மாந்தீரீகம் செய்வதாக ஏமாற்றி தங்கநகையை கொண்டு சென்ற இளைஞரை தேடிவருகின்றனர்.