காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இறந்த தன் தந்தைக்கு சிலைவைத்த தினமும் வழிபாடு செய்யும் அவரது மனைவி மற்றும் மகள்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது பூதூர் கிராமம். இந்தக் கிராமத்தில் பெருமாள் அவரது மனைவி அம்பிகாவுக்கும் 50 ஆண்டுக்கு முன் திருமணம் ஆகி 5 பெண்கள் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. பெருமாள் கூலி வேலை செய்து தன் பிள்ளைகளை வளர்த்து உள்ளனர். இவர்களுக்கு சொத்து எதுவும் கிடையாது. பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார் பெருமாள். வயது முதிர்ந்த காரணத்தால் கடந்த 2008 ஆண்டு இதே மாதம் 30 தேதி பெருமாள் இறந்துவிட்டார். தனது தந்தை கூலி வேலை செய்து 8 பிள்ளைகளையும் வளர்த்ததை உணர்ந்த குடும்பத்தினர் தற்போது பெருமாளுக்கு சிலை வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தொடந்து இடையூறுகள் வந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் கடந்த 2011 ஆண்டு சிலை செய்து வீட்டின் வாசலில் வைத்து உள்ளனர். இந்தச் சிலைக்கு அவரது மனைவி மூதாட்டி தண்ணீர் ஊற்றி ஆபிஷேகம் செய்வது வருகிறார். அவர் மகன் குடும்பத்தினர் சமைத்த உணவை சிலை முன் வைத்து படைத்துவிட்டுதான் அனைவரும் சாப்பிடுகின்றனர். தினமும் அவர் சிலை அருகே அமர்ந்து பேசுவது அவர் என் அருகில் இருப்பதைப்போல் உணர்வு ஏற்படுவதாக அவரது மனைவி கூறுகிறார்.