மதுரை அருகே அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை மேலூர் அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அம்பேத்கர் சுவர் ஓவியத்தை அவமதித்த மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மர்ம நபர்களை கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். மேலும் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.