தமிழ்நாடு

அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு

Rasus

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது.

90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை, திருப்பூர் கரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, தளிஞ்சி பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 250கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 655 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர் மட்டம் 47.7அடியில் இருந்து 53.64 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.