தமிழ்நாடு

நாளை நமதே: ம.நடராஜன்

நாளை நமதே: ம.நடராஜன்

webteam

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால் இன்றும் நாளையும் நமதே என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையம் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்தார் நடராஜன்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் ஜெயலலிதா இல்லாதது வருத்தமளிப்பதாக இருந்தாலும், அவரது அறிக்கையின் படி தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது பெருமைக்குரியது என்றார்.

அதிமுகவின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை அதிமுக என்ற ஆலமரத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் அனைவரும் ஓரணியில் இருந்து பாடுபட்டால் இன்றும் நாளையும் நமதே என்றும் நடராஜன் தெரிவித்தார்.